english version
banner
logo

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

வளர்பணம்

தினசரி சிபாரிசுகளை உபயோகிக்கும் விதிமுறை:



    கொடுக்கப்பட்ட இலக்கு மற்றும் நட்டத்தடுப்புக்கு அருகாமையில் சந்தை Gap up / Gap downல் துவங்கினால் அந்த பங்கில் வர்த்தகத்தை தவிர்க்கவும்.

    பங்கின் இலக்கு ஒரு முறை அடைந்துவிட்டால் அதே பங்கில் மீண்டும் வர்த்தகம் செய்யக்கூடாது.

    கொடுக்கப்பட்ட நுழைவு விலையை தாண்டாதவரை அந்த பங்கில் வர்த்தகம் செய்ய வேண்டாம்.

    நுழைவு விலையில் பங்கை வாங்கியவுடன் இலக்கு விலையை உடனே பதிவு செய்துவிட வேண்டும்.

    பெரும்பான்மையான பங்குகள் வேகமாக இலக்கை அடைந்துவிடும் என்பதால் சந்தை துவங்கும் நேரத்தில் இருந்து வர்த்தகம் செய்யவும்.

    சில நாட்கள் சந்தை Gap up / Gap downல் துவங்கி வர்த்தகம் செய்ய முடியாமல் போனால் வருத்தப்பட வேண்டாம், ஏனெனில் சில சிறந்த வர்த்தகங்கள் மட்டுமே நல்ல லாபத்தை அளிக்கும். வாழ்த்துக்கள்.


    ________________________________________________________________________________________


வளர்பணம்

வாராந்திர சிபாரிசுகளை உபயோகிக்கும் விதிமுறை:


    எந்த எல்லையை தாண்டினால் வாங்கலாம் என்று சொல்லபடுகிறதோ, நடப்பு விலை அந்த எல்லையை தாண்டும் போது மட்டுமே வாங்க வேண்டும்.

    எந்த எல்லையை தாண்டினால் விற்கலாம் என்று சொல்லபடுகிறதோ, நடப்பு விலை அந்த எல்லையை தாண்டும் போது மட்டுமே விற்க வேண்டும்.

    வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள இடைவெளியானது அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்களின் சக்திக்கும் வர்த்தக திட்டத்திற்கும் ஏற்ப நட்டத்தடுப்பினை அமைத்துக்கொள்ளவும்.

    கொடுக்கப்பட்ட எல்லையை விட அதிகமான அளவில் மேலேயோ அல்லது கீழாகவோ விலை துவங்கினால் , அந்த நிறுவன பங்குகளை வாங்குவதையோ அல்லது விற்பதையோ தவிர்த்து, மீண்டும் அந்த எல்லைக்கு அருகாமையில் வரும்போதோ அல்லது தாண்டும்போதோ மட்டுமே செயல்படவும்.

    லாபத்தை படிப்படியாக (2-3 பகுதியாக) வெளியே எடுக்க வேண்டும்.

    ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் 3 நிறுவனங்களிலாவது முதலீடு செய்யவும்.

     

    _________________________________________________________________________________________

 

பங்குவர்த்தகத்தில் ஈடுப்படுவோர் செய்ய மற்றும் செய்யக் கூடாதவை:


    தினமும் தாங்கள் 100% சரியான பங்குகளை வாங்கி விற்க முடியும் என்று எண்ணுவது

    சில மாதங்களிலேயே பல லட்சங்ககளை ஈட்ட முடியும் என்று எண்ணுவது

    பங்குசந்தையில் வரும் ஏற்ற இறக்கங்களை எளிதாக கணிக்க முடியும் என்று எண்ணுவது

    நஷ்டத்தை ஈடுகட்ட அதே பங்கில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வது

 


இத்தகைய தவறான எண்ணங்களால் இன்று பல முதலீட்டாளர்கள் பெறுத்த நஸ்டம் அடைகின்றனர். மேலும் லாப இலக்கு இல்லாமலே பெறும்பான்மையானோர் வர்த்தகதில் ஈடுபட்டு வருகின்றனர். பங்குகளை எந்த விலையில் வாங்க வேண்டும் எந்த விலையில் விற்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் லாபத்தை அதிகரித்து நஷ்டம் குறையும்..


    உபரிப் பணத்தை கொண்டு முதலீடு செய்வது நல்லது.

    உங்கள் முதலிட்டினை 4 பாகங்களாக பிரித்து முதலிடு செய்வது நல்லது.

    பங்குசந்தையின் அனைத்து கருவிகளையும் (பியுச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்) பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது.

    இலக்கு நிர்ணயம் செய்து வர்த்தகம் செய்ய கற்றுகொள்ளவது நல்லது.

    சந்தை எவ்வழியில் செல்கிறதோ அவ்வழியிலே செல்வது நல்லது.

    நம் சக்திக்கு மேற்பட்ட அதிகப்படியான வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

    புரளிகளை நம்பி வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும்.

    ஒரே துறையில் உள்ள பங்குகளில் மட்டுமே அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

    குறைந்த விலை பங்குகள் என்றும் ஆபத்தானவை, அதனினை அதிகம் வாங்குவதை தவிர்க்கவும்.

    ஒரு பங்கின் விலை இறங்கி கொண்டிருக்கும் போது அதை மேலும் மேலும் வாங்கி ஆவரெஜ் செய்வதை தவிர்க்கவும்.

    ஒரே நேரத்தில் பல பங்குகளைப் கொண்டு வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும்

    மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் “ஒரு காரணத்தோடு வர்த்தகம்” செய்யவும்.

 



முகப்பு பக்கம் | எங்களை பற்றி | குறிக்கோள்| விதிமுறைகள் | விலைகள் | பதிவு செய்ய | FAQ | தொடர்பு கொள்ள
 
© Copyright 2012. Valarpanam.com. All rights reserved.