english version
banner
logo

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

"குறிக்கோள்"



    வளர்பணம்.காம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. பங்குசந்தையில் போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாமல் ஈடுப்பட்டால் பெரும் மனஉளச்சலும் நஸ்டமும் மட்டுமே எஞ்சும் என்பது நீங்கள் அறிந்ததே. தென்னிந்திய மக்களில் பலர் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய மிக ஆவலுடன் உள்ளனர், போதிய வசதியும் ஆர்வமும் இருந்தும் பலரால் பங்குசந்தையில் ஈடுபட இயலவில்லை. இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சியும் ஆலோசனைகள் இல்லாததுமே ஆகும். பங்குசந்தையில் சிறந்து விளங்க இத்துறையில் உள்ள சாதக பாதகங்களை சரிவர அறிந்து Trading Discipline என்று சொல்லக்கூடிய வர்த்தக ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் அவசியம்.

    பல ஆண்டு ஆய்வுகள் சொல்வது என்னவென்றால் பங்குசந்தையில் அதிக நஸ்டம் அடைவது Retail Investors எனும் சில்லறை முதலீட்டாளர்களே. சரியான பங்குகளை தேர்வு செய்யாமலும் அதன் Trend ஐ (போக்கு) சரிவர புரிந்துக்கொள்ளாமலும், துல்லியமான நுழைவு விலை, இலக்கு மற்றும் நட்ட தடுப்பு விலைகளை சரிவர கணிக்க இயலாமலும் தவிப்பவர் பலர். தனது பொருளாதார சக்தி மற்றும் மனோபலத்தையும் மீறி வர்த்தகம் செய்து பங்குசந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களில் சிக்கி கடன்பட்டு தவிப்பவர்கள் பெரும்பாலும் சில்லறை வர்த்தகர்களே.

    மேலும் நீண்டகால முதலீடுகளும் தற்போதைய காலகட்டங்களில் பெரும் லாபம் அளிப்பதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. Intraweek Trading என்ற வாராந்திர வர்த்தக முறையையும், "Day Call" என்ற பாதுகாப்பான தினசரி வர்த்தக முறையையும் அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் வர்த்தகர்கள் சந்தை துவங்கும் முன்னரே தெளிவான மற்றும் திட்டமிட்ட வர்த்தகத்தை செய்ய முடியும்.

    பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் நஸ்டம் அடைவதற்கான காரணம், தவறான பங்குகளையும், கண்மூடித்தனமான நுழைவு விலையையும் நிர்ணயித்து, சரியான திட்டமில்லாமல் பங்கு வர்த்தகம் செய்வதேயாகும். வளர்பணம் முதலீட்டாளர்களின் வர்த்தக ஆபத்துகளை பன்மடங்கு குறைக்கும்.

    பதிவு செய்து பயன்பெறுங்கள்.

 



முகப்பு பக்கம் | எங்களை பற்றி | குறிக்கோள்| விதிமுறைகள் | விலைகள் | பதிவு செய்ய | FAQ | தொடர்பு கொள்ள
 
© Copyright 2012. Valarpanam.com. All rights reserved.